வெள்ளவத்தை கடற்கரைக்கு செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை
Sri Lanka Police
Colombo
Sri Lanka
By pavan
கொழும்பு வெள்ளவத்தை தொடருந்து நிலையத்தை அண்மித்த கடற்கரை பகுதிக்கு செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் முதலை ஒன்று சுற்றித்திரிவது அவதானிக்கப்பட்டுள்ள நிலையிலேயே பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மக்களுக்கு அறிவிக்கும் பலகை ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
காவல்துறையினர் விடுத்த வேண்டுகோள்
பாடசாலை விடுமுறை என்பதால் ஏராளமானோர் அந்த கடல் பகுதிக்கு வந்து செல்வதுடன் சிலர் தங்கள் பிள்ளைகளுடன் நீராடுவதை அவதானிக்க முடிந்துள்ளது.
எனினும் அந்த இடத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள காவல்துறை பிரிவு அதிகாரிகள் கடற்கரைக்கு வரும் மக்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளனர்.
இதனால் அங்கு செல்பவர்கள் அதிக கவனத்துடன் செயற்பட வேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி