நாட்டு மக்களுக்கு காவல்துறையினரின் அவசர எச்சரிக்கை
இணையம் ஊடாக நடக்கும் நிதி மோசடி தொடர்பாக காவல்துறையினர் மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டில் அண்மைக் காலமாக பல்வேறு பகுதிகளிலும் இணையம் மூலமாக இடம்பெறும் நிதி மோசடி காரணமாக ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
வட்ஸ் அப் (whatsapp), டெலிகிராம் போன்ற சமூக ஊடகக் குழுக்கள் மூலம் இணைய வழி நிதி மோசடிகள் நடைபெறுவதாகவும் இது தொடர்பில் தினமும் முறைப்பாடுகள் பதிவாகுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
எனவே சமூக ஊடகக் கணக்குகள் மூலம் பல்வேறு வருமான ஆதாரங்களை வழங்குவதாகக் கூறி அறிமுகமற்ற நபர்கள் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள் செய்யும் மோசடி தூண்டுதல்களுக்கு ஏமாற வேண்டாம் எனவும் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் வங்கி கணக்கு இலக்கங்கள், கடவுச் சொற்கள் உள்ளிட்டவற்றை வெளியாட்களுக்கு வழங்குவதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
