ஊடகவியலாளர் நிலாந்தனை தேடிச் சென்ற காவல்துறையினர்

Sri Lanka Police Batticaloa Journalists In Sri Lanka
By Sumithiran Nov 27, 2022 07:19 PM GMT
Report

மட்டக்களப்பு மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் நிலாந்தனை தேடிச் சென்ற காவல்துறையினர் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடாத்தி தகவல்களை பெற்றுச் சென்றுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையம், கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் செயலாளரும் சுயாதீன ஊடகவியலாளருமான செல்வக்குமார் நிலாந்தனை இன்று 27.12.2022 மதியம் 12.40 மணியளவில் அவரது வீட்டிற்கு தேடிச் சென்ற காவல்துறையினர் அவர் இல்லாத நிலையில் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடாத்தி தகவல்களை பெற்றுச் சென்றுள்ளனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முயற்சி

ஊடகவியலாளர் நிலாந்தனை தேடிச் சென்ற காவல்துறையினர் | Police Went Looking For Journalist Nilanthan

ஊடகவியலாளர் நிலாந்தனை இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு காவல்துறையினர் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் முயற்சி செய்து வந்த நிலையில் அவர் நாட்டை விட்டு வெளியேறி இருந்த நிலையில் அவருக்கு எதிராக மீண்டும் மீண்டும் விசாரணைகளை நடாத்தி வரும் இலங்கை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் ஊடகவியலாளர் நிலாந்தனை கடந்த மாதம் கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.

அத்துடன் அவரது வீட்டிற்கு அடிக்கடி செல்லும் காவல்துறையினர் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் ஊடகவியலாளரின் குடும்பத்தினரை அச்சுறுத்தி "அவர் எங்கு இருக்கிறார்? எந்த நாட்டில் இருக்கிறார்? அவருக்கு விசாரணை உள்ளது அவரை நாட்டிற்கு வரச் சொல்லுங்கள்? இல்லாவிட்டால் நீங்கள் விசாரணைக்கு வர வேண்டும் என கூறி அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர்.

 ஊடகவியலாளர் எங்கே

ஊடகவியலாளர் நிலாந்தனை தேடிச் சென்ற காவல்துறையினர் | Police Went Looking For Journalist Nilanthan

இன்று ஊடகவியலாளரின் வீட்டு வளாகத்திற்குள் வந்த இரண்டு காவல்துறையினர் இதேபோல் ஊடகவியலாளர் எங்கே உள்ளார்? எந்த நாட்டிற்கு சென்றுள்ளார்? எப்போது வருவார் என்ற கேள்விகளை கேட்டதோடு தொலைபேசி இலக்கம். What's app இலக்கங்கள் உள்ளிட்ட பல தகவல்களை பெற்றுச் சென்றுள்ளனர்.

ஒரு ஊடகவியலாளரின் வீட்டிற்குச் சென்று அவரை பயங்கரவாதி போன்று சித்தரித்து தொடர்ச்சியாக குடும்பத்தினரை விசாரணை நடத்தி வருவதால் அவரது குடும்பத்தினர் மிகுந்த அச்சத்தில் உள்ளதோடு. தான் நாடு திரும்ப முடியாத நிலையில் உள்ளதாக ஊடகவியலாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.


Gallery
ReeCha
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி