ரணிலை கேடயமாகப் பயன்படுத்துகிறதா பெரமுன - ஊடகங்கள் மூலம் வெளியான தகவல்!
"பொதுஜன பெரமுன காப்பாற்றப்படுவதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க பயன்படுத்தப்படவில்லை, ரணில் விக்ரமசிங்கவை எவரும் பயன்படுத்த முடியாது."
இவ்வாறு, முன்னாள் அமைச்சர் நவின் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன உயிர் வாழ்வதற்கு ரணில் பயன்படுத்தப்படுகின்றாரா என ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ரணில் பயன்படுத்தப்படுகின்றாரா
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
"கடந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் ஐக்கிய தேசிய கட்சியை கலைப்பதற்கு மூத்த உறுப்பினர்களுடன் இணைந்து கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.
இருப்பினும், கட்சியை கலைப்பதற்கு நான் உட்பட பலர் விரும்பவில்லை.
பொதுஜன பெரமுன காப்பாற்றப்படுவதற்காக அவர் பயன்படுத்தப்படுவதாக பலர் உணரலாம், உண்மையில் அவ்வாறல்ல அவர்களை வினைத்திறன் மற்றும் நுட்பமான முறையில் பயன்படுத்தவே ரணில் முனைகின்றார்.
ரணில் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்த பெரிய சொத்து, அதைவிட அவர் ஒரு சிறந்த தலைவர்." இவ்வாறு முன்னாள் அமைச்சர் நவின் திசாநாயக்க பதிலளித்துள்ளார்.
