அரசியலில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்: தேர்தலை நடத்தினால் ஆதரிப்போம் என்கிறார் ஜி.எல்.பீரிஸ்

Ranil Wickremesinghe Sri Lanka President of Sri lanka
By Pavan Oct 11, 2023 08:01 AM GMT
Report

நாட்டில் தேர்தல் நடத்தப்படுமானால் தற்போது நடைமுறையில் உள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறைமையை நீக்குவதற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்குமென நாடாளுமன்றத்தின் சுயாதீன உறுப்பினரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர்த் தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சிகளுக்கு ஒருபோதும் ஆதரவு வழங்கப்படாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதாகவும், அதனை தொடர்ந்து ஒக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நஸீர் அஹமட்டிற்கு பதிலாக மௌலானா: வெளியானது வர்த்தமானி

நஸீர் அஹமட்டிற்கு பதிலாக மௌலானா: வெளியானது வர்த்தமானி

அதிபர் முறைமையை நீக்கம்

இந்த நிலையில், தேர்தல் நடத்தப்படுமானால் தற்போது நடைமுறையில் உள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறைமையை நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆகியன ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளன.

அரசியலில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்: தேர்தலை நடத்தினால் ஆதரிப்போம் என்கிறார் ஜி.எல்.பீரிஸ் | Political Crisis Lanka President Change

இதனை தொடர்ந்து, குறித்த தீர்மானத்தை தாமும் ஆதரிப்பதாக நாடாளுமன்றத்தின் சுயாதீன உறுப்பினரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், தேர்தலை நடத்துவதற்காக பாரிய நிதியை செலவிட முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்திருந்ததை அவர் நினைவூட்டியுள்ளார்.

ரணிலை கடுமையாக சாடிய விக்கினேஸ்வரன்!

ரணிலை கடுமையாக சாடிய விக்கினேஸ்வரன்!

பாரிய திட்டம்

ஐக்கிய தேசியக் கட்சி எந்தவொரு திட்டமுமின்றி இவ்வாறான கருத்துக்களை முன்வைக்காதெனவும் அவரது கருத்தின் பின்னணியில் பாரிய திட்டமொன்று இருக்குமெனவும் ஜி.எல்.பீரிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

அரசியலில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்: தேர்தலை நடத்தினால் ஆதரிப்போம் என்கிறார் ஜி.எல்.பீரிஸ் | Political Crisis Lanka President Change

இதேவேளை, தேர்தல்களை நடத்துவதற்கான சாதகமான சூழலை உருவாக்குவதற்காக உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தையும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், இவ்வாறான அரசாங்கத்தின் நடவடிக்கைகள தாம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் எதிர்க்குமென ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026