சாணக்கியனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ள பிள்ளையான் தரப்பு!

Batticaloa Pillayan
By pavan Aug 14, 2023 10:14 AM GMT
Report

எமது கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சந்திரகாந்தனுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தொடர்ச்சியாக பொது இடங்களிலும் அபிவிருத்தி குழு கூட்டங்களிலும், உண்மைக்கு புறம்பான செய்திகளை தெரிவித்து வருவதனால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

அவரது கட்சி அலுவலகத்தில் திங்கட்கிழமை(14.08.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு 

சாணக்கியனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ள பிள்ளையான் தரப்பு! | Political Crisis Lanka Ranil Govt Pillaiyaan

இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அண்மையில் எமது கட்சியையும் அதனுள் உள்ளீர்த்து தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் அவருக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.

குறிப்பாக எமது அரசியல் இருப்பை அழிக்கும் நோக்குடனும் குண்டு வெடிப்புடன் சம்பந்தபடுத்திய கூற்றுக்கு எதிராகவும் நாம் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

அவர் தெரிவித்த கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என அவர் ஒத்துக் கொள்ளாத பட்சத்தில் அவருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்கவுள்ளோம்.

நாட்டின் அதிபரின் வேண்டுகோளின் பெயரில் 13 வது திருத்தச் சட்டம் தொடர்பாக எமது கட்சியின் தலைவர் அது தொடர்பான ஆலோசனைகளையும் முன்மொழிவுகளையும் அதிபரிடம் கையளித்துள்ளார்.

13 வது திருத்தச் சட்டம்

சாணக்கியனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ள பிள்ளையான் தரப்பு! | Political Crisis Lanka Ranil Govt Pillaiyaan

அதில் 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் அவை மத்திய அரசாங்கத்துக்கு உரிய அதிகாரங்களை என அவை வரையறுக்கப்பட வேண்டும் எனவும். ஏற்கனவே மீளப் பெறப்பட்ட அதிகாரங்கள் மீண்டும் 13வது திருத்தச் சட்டத்தின்படி அவை வழங்கப்பட வேண்டும்.

மாகாண சபை கலைக்கப்பட்டால் தேர்தல் சட்ட திட்டத்தின்படி அடுத்த மாகாண சபைக்குரிய அமர்வு தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். வெளிநாட்டு முதலீடுகளை மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர மத்திய வங்கி அனுமதி வழங்கப்பட வேண்டும்.

மாவட்ட ரீதியான அபிவிருத்திகளை முன்னெடுக்க துறைசார் அதிகாரிகளை நியமிப்பதும், மாவட்ட செயலாளரை நியமிப்பது, சம்பந்த மாகவும் மாகாண சபைக்கு வழங்கப்பட வேண்டும், எனவும் நாம் தெளிவாகக் கூறியிருக்கின்றோம்.

நீண்ட கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வுகளை வழங்க இந்த 13 வது திருத்தச் சட்டத்தின் ஊடாக நமது கட்சி நடவடிக்கைகளை எடுக்கும் என அவர் இதன்போது தெரிவித்தார். 

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025