தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் நுழையப்போகும் ரஞ்சன்..! சஜித் பகிரங்கம்
தேசிய பட்டியல்
நாடாளுமன்றத்தில் தேசிய பட்டியல் ஊடாக ஏற்படும் வெற்றிடத்தின் ஊடாக, ரஞ்சன் ராமநாயக்கவை நாடாளுமன்றத்திற்குள் உள்வாங்க நடவடிக்கை எடுப்பதாக எதிர்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பின் காரணமாக 4 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இனி வரும் காலங்களில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான எந்தவொரு அறிக்கையையோ அல்லது நடவடிக்கையையோ மேற்கொள்ள வேண்டாம் என அதிபர் நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
We the @sjbsrilanka wholeheartedly pledge to appoint @ramanayaker to the parliament in the first instance of an occurrence of a vacancy in the national list. pic.twitter.com/xz68cEidAp
— Sajith Premadasa (@sajithpremadasa) August 26, 2022
ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பான மேலதிக பணிகளை நீதி அமைச்சின் செயலாளர் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.