ரணிலுக்கு ஆதரவாக தோன்றும் புதிய கட்சி - பொங்கி எழும் மொட்டு தரப்பினர்

Basil Rajapaksa Ranil Wickremesinghe
By pavan Aug 03, 2023 09:14 PM GMT
Report

சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா புதிய அரசியல் கூட்டணியை அமைப்பதற்கு எதிராக சிறிலங்கா பொதுஜன பெரமுன எச்சரிப்பு விடுத்துள்ளது.

இந்த எச்சரிப்புக்கு மத்தியிலும் தமது கூட்டணி ஆரம்பிக்கப்படுமென நிமல் லன்சா தெரிவித்ததாக தகவலறிந்த அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர்த் தேர்தலில் தற்போதைய சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தலைமையில் புதிய கூட்டணியொன்று அமைக்கப்படவுள்ளது.

நாமல் அதிருப்தி 

ரணிலுக்கு ஆதரவாக தோன்றும் புதிய கட்சி - பொங்கி எழும் மொட்டு தரப்பினர் | Political Parties Sri Lanka New

இந்த கூட்டணியில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவினர், சுதந்திர கட்சியினர் மற்றும் மேலும் சில சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்சன யாப்பா, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் இந்த புதிய கூட்டணியில் இணையவுள்ளனர்.

நிமல் லன்சா தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த புதிய அரசியல் கூட்டணியின் முதலாவது பொதுக்கூட்டம் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.

அத்துடன், தமது புதிய கட்சி தொடர்பில் நிமல் லான்சா, அண்மையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதிதாக அமைக்கப்படவுள்ள அரசியல் கூட்டணி மற்றும் நிமல் லன்சாவின் நடவடிக்கை குறித்து சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

புதிய கூட்டணி

ரணிலுக்கு ஆதரவாக தோன்றும் புதிய கட்சி - பொங்கி எழும் மொட்டு தரப்பினர் | Political Parties Sri Lanka New

இதனை தொடர்ந்து, சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றுக்கு தெரிவான நிமல் லன்சா, புதியதொரு கூட்டணியை அமைப்பதை எதிர்த்து கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் பசில் ராஜபக்ச, அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் தகவலறிந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறான எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும், புதிய கூட்டணியை அமைப்பது தொடர்பான நடவடிக்கைகளை நிமல் லன்சா மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025