சுமந்திரன் - சிறீதரனுக்கு இடையிலான அரசியல் பிளவு : முகத்திரையை கிழித்த அமைச்சர்
ஒரே கட்சியில் இருந்து சட்டத்தரணி சுமந்திரனும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் பிளவுபட்டு இருப்பதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (03) யாழில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ஒரே கட்சியில் இருந்து பிளவுபட்டு காணப்படும் சுமந்திரனுக்கு என்ன அறுகதை உள்ளது தமிழ் மக்களின் ஒற்றுமை பற்றி கதைப்பதற்கு ?
முதலில் கட்சிக்குள் இருக்கும் நீங்கள் இருவரும் ஒன்று சேருங்கள், கடந்த காலத்தில் ராஜபக்சாக்கலுக்கும் ரணிலுக்கும் வால் பிடித்த நீங்கள், தற்போது தேசிய மக்கள் சக்தியை பார்த்து நரி போல ஊளையிடுபவர்களாக மாறியுள்ளீர்கள்.
இந்தநிலையில், இவ்வாறான நரியின் ஊளையை கண்டு, சிங்கங்கள் ஒரு போதும் கலவரம் அடையபோவதில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் நடவடிக்கை, தமிழ் மக்களின் அரசியல் நிலைமை, தமிழ் தலைமைகளின் அரசியல் நகர்வு மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவர் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
