கோட்டாபய அரசின் திட்டம் ஒத்துவராது! அரசியல் ரீதியில் செயலிழந்த மகிந்த - அம்பலத்திற்கு வரும் தகவல்கள்
அரசாங்கம் ஒரு திசையில் செல்கிறது. பதினொரு பங்காளி கட்சிகளான நாங்கள் வேறு திசையில் பயணிக்கிறோம். நாங்கள் தேசியவாத இடதுசாரி திசையில் பயணிக்கிறோம். அரசின் திட்டம் எங்களுக்கு ஒத்துவராது. எதிர்காலத்தில் 11 பங்காளி கட்சிகளும் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும்” என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara)தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் அனைத்து தீர்மானங்களும் அரச தலைவர் மற்றும் நிதியமைச்சரால் எடுக்கப்படுவதாக இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) பிரதமராக இருந்த போதிலும் அவர் அரசியல் ரீதியாக செயலிழந்து விட்டதாகவும், இந்த போராட்டத்தில் அரசியல் களத்தில் இருந்து தான் விலக வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,