மகிந்தவுக்கு வாய்ப்பை வழங்க முயற்சி : வால்பிடித்து திரியும் ரணில் - செல்வரட்ணம் பகிர்..!
நாட்டில் 13ஐ வலியுறுத்துவது சிங்கள மக்கள் மத்தியில் மீண்டும் இனவாதத்தை ஏற்படுத்தி மகிந்தவுக்கு வாய்ப்பை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை வட கொழும்பு இந்து பரிபாலன சங்கத்தின் பொதுச் செயலாளரும் இலங்கை விஸ்ம கர்மா சங்கத்தின் தலைவரும் ஆன்மிகப் பணியாளருமான வருபவருமான எஸ்.செல்வரட்ணம் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபரின் கருத்து ஒரு நிலையாக இல்லாமல் தேர்தல் தொடர்பில் மாற்றுக்கருதத்துக்களை தெரிவிப்பதாகவும், அவர் வால்பிடித்துக்கொண்டு திரிவதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு நாட்டில் தற்போது இடம்பெரும் ஆசிரியர் நியமனங்களில் அரசியல் தலையீடு காணப்படுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், மகிந்த ராஜபக்சவுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றாரோ என்ற சந்தேகம் உருவாகியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாட்டுக்குத் தேர்தல் தேவையில்லை. அவ்வாறு தேர்தல் வைத்தாலும் அதே அமைச்சர்களே சுற்றிச் சுற்றி வருவார்கள்.அப்படி நடந்தாலும் இந்த நாட்டின் தலையெழுத்து மாறாது என தெரிவித்துள்ளார்.
