பொதுவேட்பாளர் சர்ச்சை : யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பின்னணியில் அரசியல் : கோவிந்தன் கருணாகரம் விசனம்
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்(Jaffna University Students Union) பொது வேட்பாளர் ஒருவர் கிழக்கில் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டும் என்கின்ற எண்ணக்கருவை வெளியிட்டுள்ளமைக்கு சில அரசியல் காரணங்கள் இருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(G. Karunakaram) தெரிவித்துள்ளார்.
அதிபர் பொது வேட்பாளர் என்கின்ற விடயம் தமிழ் தேசிய பரப்பிலே இருக்கும் அனைவராலும் கொள்கை ரீதியாக முதலாவதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னரே வேட்பாளர் யார், எந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தீர்மானிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரிவினைவாதம்
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தமட்டில் மூவின மக்களும் கிட்டத்தட்ட சமனாக வாழும் ஒரு மாகாணம் எனவும் குறிப்பிட்ட சில காலம் வடக்கு கிழக்கு என்ற பிரிவினைவாதம் சில அரசியல்வாதிகளாலும் அரசியல் கட்சிகளாலும் தங்களது சுயலாப அரசியலுக்காக முன்னிலைப்படுத்தப்பட்டு பிரதேசவாதம் விதைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் பெரும்பாலான தமிழ் மக்கள் பிரதேசவாதத்துக்குள் சிக்குபட்டவர்கள் அல்ல எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |