மக்களை ஏமாற்றிய கோட்டாபய! திட்டித் தீர்த்த பிக்கு
இலங்கை மக்களின் அதிக வாக்குகளை பெற்று அதிபராக தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ச மக்களை ஏமாற்றியதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் அபயராமை விகாரையின் விகாராதிபதியுமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் அதிபரும் கோட்டாபய ராஜபக்சவின் சகோதரருமான மகிந்த ராஜபக்ச பங்கேற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது, முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நிர்வாகத்திறமை இல்லை
அதிபராக கோட்டாபய ராஜபக்ச நியமிக்கப்படுவதற்காக மகாநாயக்க தேரர்கள் பாடுபட்டதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் அபயராமை விகாரையின் விகாராதிபதியுமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
எனினும், அவர் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி விட்டு நாட்டை விட்டு வெளியேறியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவுக்கு நிர்வாகத்திறமையே இல்லை என்பதோடு அவர் குறிப்பிட்ட தரப்பினரை மாத்திரம் தெரிவு செய்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கூறியுள்ளார்.
இதன் போது, அவர் தவறான முறையில் ஆட்சி செய்வதை மகாநாயக்க தேரர்கள் சுட்டிக்காட்டியதோடு, இந்த நிலை தொடருமானால் அதிபராக தொடர்ந்தும் சேவையாற்ற முடியாத நிலை ஏற்படுமெனவும் ஏச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |