மறைந்த முன்னாள் பரிசுத்த பாப்பரசரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட வத்திக்கான் கல்லறை பற்றி!
முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் உடல்நலக் குறைவு காரணமாக புத்தாண்டு தினத்தன்று தனது 95 ஆவது வயதில் இயற்கை எய்தியிருந்தார்.
மறைந்த முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்டின் உடல், பல்லாயிரக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலியுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பாப்பரசர் போப் பதினாறாம் பெனடிக்ட் வத்திக்கான் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வத்திக்கான் கல்லறை
மறைந்த முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்டின் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை, ஒரு காலத்தில் 23 ம் போப் ஜான், பின்னர் 2ம் போப் ஜேன் போல் ஆகிய திருத்தந்தையர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையாகும்.
இறுதிச் சடங்கில், புனிதர் இல்லம், வழிபாட்டு விழா அலுவலகம் மற்றும் சென் பீட்டரின் வத்திக்கான் அத்தியாயம் ஆகியவற்றின் முத்திரைகளுடன் திருத்தந்தையின் உடல் வைக்கப் பட்டுள்ள சைப்ரஸ் பெட்டி சுற்றி ஒரு கருவூலம் வைக்கப்பட்டு குறித்த கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
— Pope Francis (@Pontifex) January 5, 2023