பாப்பரசரிடமிருந்து அமெரிக்காவிற்கு எதிராக வெளிக்கிளம்பிய கடும் கண்டனம்
United States of America
Vatican
Ollie Pope
Iran-US Conflict
By Sumithiran
ஈரான் போரில் வெற்றிபெற அமெரிக்க மக்கள் தினமும் இயேசுவிடம் பிரார்த்திக்க வேண்டும் என வலியுறுத்திய அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஹெக்ஸெத்துக்கு பாப்பரசர் லியோ கடும் கண்டனம் தெரிவித்தார்.
போரை வெளிப்படையாக மதரீதியாக இணைப்பது, இயேசுவின் வழிக்கு முரணானது. பிறரை ஆதிக்கம் செலுத்தும் ஆசையை விடுத்து, பிறருக்கு எப்படி வாழ்வளிப்பது என்ற நோக்கமே இயேசுவின் வழி எனவும் பாப்பரசர் கருத்து தெரிவித்தார்
அமெரிக்காவில் பிறந்த முதல் போப்பாண்டவர்
பாப்பரசர் லியோ 14வது கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்றில் அமெரிக்காவில் பிறந்த முதல் போப்பாண்டவர் ஆவார். தனது சொந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் மத ரீதியாக போரை நியாயப்படுத்தியதை அவர் கடுமையாக எதிர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி