உலகத் தலைவர்களுக்கு பாப்பரசர் பிரான்சிஸ் ஆலோசனை
காலநிலை மாற்றத்தின் அசாதாரண தன்மையின் அச்சுறுத்தலில் இருந்து மீள, சகலரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்து செயற்படுமாறு பாப்பரசர் பிரான்சிஸ் (Pope Francis) உலகத் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
கிளாஸ்கோவில் நாளை முதல் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாட்டில் கலந்து கொள்ளும் உலகத் தலைவர்கள், எதிர்கால சந்ததியினரின் நலனை கவனத்தில் கொண்டு, உறுதியாகச் செயற்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்தோடு, காலநிலை மாற்றம், கொரோனா தொற்று மற்றும் பொருளாதார பிரச்சினைகளால் ஏற்பட்டுள்ள சவால்களை தொலைநோக்கு மற்றும் தீவிரமான முடிவுகளுடன் எதிர்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள காலநிலை மாற்ற மாநாட்டில் பாப்பரசர் பிரான்சிஸ் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டிருந்தபோதும், அவர் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டார் என வத்திக்கான் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.