புனித பாப்பரசரின் இளமைக்கால காதல் : வெளிவரும் சுவராஸ்ய தகவல்
வத்திக்கானில்(vatican) நேற்றையதினம் (21) மாரடைப்பு காரணமாக உயிரிழந்த புனித பாப்பரசர் பிரான்சிஸ்(pope francis) அவர்களும் இளமைக்காலத்தில் காதல் வலையில் விழுந்துள்ள சுவாரஸ்ய தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
ஆர்ஜன்ரீனாவில்(argentina) பிறந்த ஜோர்ஜ் மரியோ பெர்கோக்லியோ என்ற பெயர் கொண்ட பாப்பரசர் தனது 12 ஆவது வயதில் அமலியா டாமோன்டே என்பவருக்கு காதல் கடிதம் கொடுத்துள்ளார்.
திருமணம் செய்யவில்லை என்றால், பாதிரியாராகச் செல்வேன்
அந்த கடிதத்தில் உன்னைத் திருமணம் செய்யவில்லை என்றால், பாதிரியாராகச் செல்வேன் என தெரிவித்துள்ளார்.அந்தக் காதல், நிராகரிப்பு அவரின் எதிர்காலத்தையும் அமைத்துவிட்டது.
இது தொடர்பாக பல ஆண்டுகள் கழித்து ஏபி செய்தி நிறுவனத்துக்கு அமலியா டாமோன்டே அளித்த நேர்காணலில், பெர்கோக்லியோ அளித்த கடிதத்தை நினைவு கூர்ந்தார்.
இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது
இது குறித்து அவர் தெரிவிக்கையில், ''அவர் (பாப்பரசர்) எழுதிய கடிதம் இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது. ஒரு காகிதத்தில் வெண்மை நிற வீட்டை வரைந்திருந்தார். அதன் மேற்கூரை சிவப்பு நிறத்தில் இருந்தது. எதிர்காலத்தில் நம் திருமணத்துக்குப் பிறகு உனக்காக நான் வாங்கப்போகும் வீடு இது'' என அக்கடிதத்தில் எழுதியிருந்தது.
''நான் உன்னைத் திருமணம் செய்யவில்லை என்றால், பாதிரியாராகச் சென்றுவிடுவேன்'' எனவும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இது குழந்தைத்தனமான செயல்கள்; அதற்குமேல் வேறொன்றுமில்லை என பிற்காலத்தில் அளித்த நேர்காணலில் டாமோன்டே பகிர்ந்துகொண்டார்.
பெற்றோர் மிகவும் கண்டிப்பு
அந்த வயதில் என்னுடைய பெற்றோர் மிகவும் கண்டிப்புடன் இருந்தனர். அதனால் அக்கடிதம் பிற்காலத்தில் கவனிக்கப்படாமலேயே போனது எனக் குறிப்பிட்டார்.
''ஒரு பையனிடமிருந்து உனக்கு கடிதம் வருகிறதா என ஆவேசத்துடன் பேசி என்னை பள்ளிக்கு அழைத்துச் சென்றுவிட்டார் என் தாய். அதன்பிறகு நாங்கள் இருவரும் சந்திக்காதபடி என் தாய் என்னை விலக்கியே வைத்திருந்தார்'' என டாமோன்டே நினைவுகளைப் பகிர்ந்தார்.
நீண்ட காலத்துக்குப் பிறகு பெர்கோக்லியோ(பாப்பரசர் பிரான்சிஸ்) குடும்பம் மெம்பிரில்லர் சாலையில் இருந்து விலகிச் சென்றது. மறுபுறம், அமலியா டாமோன்டேவுக்கும் திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு, அமலியா டாமோன்டே மீண்டும் அவரைத் தொடர்பு கொள்ள நினைக்கவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
