அடுத்த பாப்பரசர் நானே ..! சர்ச்சையை ஏற்படுத்திய ட்ரம்பின் புகைப்படம்
உலகம் முழுவதும் உள்ள, 140 கோடி கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மதத் தலைவரான பாப்பரசர் பிரான்சி(pope francis)ஸ், வத்திக்கானில்(vatican) கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி காலமானார்.
புதிய பாப்பரசரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் 07 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில்,அண்மையில் அடுத்த பாப்பரசர் தேர்வு குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ” நான் பாப்பரசராக இருக்க விரும்புகிறேன். அதுவே என் முதல் தேர்வாக இருக்கும்.” என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump) பதில் அளித்து இருந்தார்.
வலுக்கும் கண்டனம்
இன்று பாப்பரசர் உடையில் தான் இருப்பது போன்ற ஒரு ஏஐ புகைப்படத்தை ட்ரம்ப் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், ட்ரம்ப்பின் இந்த புகைப்படம் பாப்பரசரையும் புதிய பாப்பரசர் தேர்வு செய்யும் நடைமுறையையும் அவமதிப்பதாக இருப்பதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
