பாப்பரசரின் உடல்நிலை : வெளியான அறிவிப்பு
பாப்பரசர் பிரான்சிஸ்(Pope Francis) "சிக்கலான மருத்துவ நிலைமைக்கு" சிகிச்சை பெற்று வருகிறார், மேலும் தேவையான வரை மருத்துவமனையில் இருப்பார் என்று வத்திக்கான்(vatican) தெரிவித்துள்ளது.
புனித திருத்தந்தை பிரான்சிஸ், சமீபத்தில் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காகவும், மூச்சுக்குழாய் அழற்சி குறித்த கூடுதல் பரிசோதனைக்காகவும் அனுமதிக்கப்பட்டார்.
சோதனைகளில் சுவாச தொற்று
சோதனைகளில் சுவாச தொற்று இருப்பது தெரியவந்ததால், அவரது உடல்நிலை தற்போது மிகவும் மோசமாக இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் பாப்பரசர் "நல்ல மனநிலையில்" இருப்பதாக வத்திக்கான் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புருனி கூறினார்
88 வயதான பாப்பரசர் பிரான்ஸிஸ், வெள்ளிக்கிழமை (14) திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, வத்திக்கானில் உள்ள வைத்தியசாலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ரோமிலுள்ள வைத்தியசாலையில் அனுமதி
அங்கு அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் நுரையீரலில் தொற்றுப் பாதிப்பு இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து மேலதிக சிகிச்கைக்காக இத்தாலியின் ரோமிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாப்பரசர் பிரான்ஸிஸுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
