போராட்டம் படக்குழுவினரின் தைப்பொங்கல் வாழ்த்துகள்
தமிழர் திருநாளாம் தைத்திருநாள் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிறந்திருக்கும் புத்தாண்டு எல்லோரது வாழ்க்கையிலும் மகிழ்ச்சியையும் வெற்றியையும் தர வேண்டும் என போராட்டம் படக்குழுவினர் தமது தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
ஈழத்தமிழ் சினிமாவின் அடையாளமாக ஐபிசி தமிழின் பிரமாண்ட தயாரிப்பான 'போராட்டம்' திரைப்படமானது மில்லர் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் மக்களின் கோரிக்ககைக்கமைய போராட்டம் என்ற பெயர் மாற்றப்பட்டது.
இந்த நிலையில் போராட்டம் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் தமது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
தமிழ் மக்களின் அடையாளங்களையும், எமக்காக அர்ப்பணித்தவர்களின் அடையாளங்களையும் பெருமைப்படுத்தும் முகமாக உருவாக்கப்படும் “போராட்டம்” திரைப்படம் ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.

ஐபிசி தமிழ் ஊடக நிறுவனத்தின் தலைவர் பாஸ்கரன் கந்தையா தயாரிப்பில் ராஜ் சிவராஜ் மற்றும் பூவன் மதீசன் ஆகியோரது கூட்டு இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்த திரைப்படம் ஈழ சினிமாவில் புதிய திருப்புமுனைக்கான முயற்சியாக எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |