யாழில் பிரமாண்டமாக இடம்பெறவுள்ள போராட்டம் திரைப்பட இசை வெளியீட்டு விழா!
ஈழத் திரையுலகில் புதியதோர் அத்தியாயத்தைப் படைக்கவிருக்கும் “போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா யாழில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் - திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி மாலை 5 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ள மண்டபத்தில் இருக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளோர் 070 341 4565 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முன்கூட்டியே தங்கள் வருகையை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்த இசை வெளியீட்டு விழாவில் ஏராளமான பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ள நிலையில் தாங்களும் கலந்து கொண்டு, “போராட்டம்” திரைப்படக் குழுவினரை உற்சாகப்படுத்தி, விழாவை சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் அழைத்து நிற்கின்றனர்.
இதேவேளை ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள ‘போராட்டம்’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |