யாழில் மக்கள் கொண்டாடித்தீர்த்த போராட்டம் திரைப்படம் : நிறைந்து வழிந்த திரை அரங்கு
ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள ‘போராட்டம்’ திரைப்படம் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
‘போராட்டம்’திரைப்படத்தின் சிறப்புக் காட்சி நேற்று (01) யாழில் திரையிடப்பட்ட நிலையில் அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் வருகை தந்ததுடன் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
அந்தவகையில், போராட்டம் திரைப்படத்தின் நடிகர்கள் தேர்வு மிகச்சிறப்பாக இடம்பெற்றுள்ளதாகவும் பூவன் மதீசனின் இசையும், ஏ.கே. கமலின் ஒளிப்பதிவும் படத்தை மேலும் மெருகூட்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இலங்கைப் பிரச்சினையை வெளிப்படுத்துகின்ற தரமான படமாக இந்தப்படம் அமைந்துள்ளதாகவும் இந்த திரைப்படம் தமிழ் சமூகத்திற்கு மிகுந்த வெற்றியைத் தந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை போராட்டம் திரைப்படம் இன்று (02) முதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
'போராட்டம்' திரைப்படத்திற்கு வலுச்சேர்ப்போம் : மக்களை அணிதிரளுமாறு ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் அறைகூவல்!
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |