போர்ட் சிட்டி ஆணைக்குழுவின் தலைவர் யார்? கசிந்தது தகவல்
president
colombo
port city
By Vanan
கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டத்தின் உத்தேச ஆணைக்குழுவுக்கான தலைவராக ஹான்ஸ் விஜேசூரிய நியமிக்கப்படவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த செய்திக் குறிப்பில், டயலொன் தொலைத்தொடர்பு நிறுவனம் மற்றும் அதன் தலைமை நிறுவனமாகிய ஆசியாட்டா நிறுவனத்தின் உயர்நிலை அதிகாரியாக இருந்துள்ள இவர், கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியுமாவார்.
இந்த நிலையிலேயே மேற்படி ஆணைக்குழுவின் தலைவராக இவரை நியமிக்க அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
அதேவேளை சர்ச்சைக்குரிய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு எதிர்வரும் 5ஆம் திகதி இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்