ரொனால்டோவால் அணி ஒன்றுக்கு கிடைத்த அங்கீகாரம்!
கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம்பெற்றுள்ள சவுதி அரேபியாவின் அல் நஸ்ஸர் அணியானது உலக அளவில் அதிகமாக இணையத்தில் தேடப்பட்ட விளையாட்டு அணிகளில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கூகிள் நிறுவனம்,அந்த ஆண்டில் அதிகம் தேடப்பட்ட பல வகையிலான தரவுகளை வெளியிடுவது வழக்கமாக கொண்டுள்ளது.
இந்த தரவுகளில் விளையாட்டு அணிகள், செய்திகள், நபர்கள் மற்றும் சமையல் குறிப்புகள் உட்பட பல தலைப்புகள் இடம்பெறும்.
அல் நஸ்ஸர் அணி
அந்தவகையில் 2023ல் விளைட்டு அணிகள் வரிசையில் அல் நஸ்ஸர் அணியானது உலக அளவில் அதிகமாக தேடப்பட்ட விளையாட்டு அணிகளில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.
முதல் இரண்டு இடங்களில் மெஸ்ஸி இணைந்துள்ள Inter Miami கால்பந்து அணியும் Los Angeles Lakers என்ற கூடைப்பந்து அணியும் இடம்பெற்றுள்ளது.
ரியாத்தை சேர்ந்த கால்பந்து அணியான அல் நஸ்ஸர், கடந்த 2022 இறுதியில் போர்த்துகீசிய நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவை அணியில் இணைத்துக் கொண்ட பிறகு உலகளவில் கவனம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.