விற்கப்படும் தமிழ் சமூகம் : சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சர் பதவியா !
ஜே.வி.பியின் ஆட்சியின் கீழ் சுமந்திரன் ( M. A. Sumanthiran) வெளிவிவகார அமைச்சாராக வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிப்பதாக முன்னாள் நிர்வாக சேவை அதிகாரி செல்வின் இரேணியஸ் (Selvin Irenias) சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒட்டு மொத்தமாக தமிழ் சமூகத்தை விற்கப் போகின்றார்கள்.
தற்போது நடைபெறும் அரசியல் அறம் சார்ந்து நடைபெறும் அரசியல் அல்ல, குறிப்பாக தமிழ் மக்களுக்கான அரசியலில் இந்நிலையுள்ளது.
மாற்றம் என்பது சொல்வதற்கு நன்றாக இருக்கும் ஆனால் நடைமுறையில் மாற்றம் சாத்தியப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மேலும், நாடாளுமன்ற தேர்தல் களம், ஜே.வி.பியினரின் ஆட்சி மாற்றம், சுமந்திரனின் அரசியல் நகர்வு மற்றும் தமிழ் மக்களின் அரசியல் வாழ்வு தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |