நேட்டோ மீது ரஷ்யா தாக்குதல் நடத்தும் சாத்தியம்! எச்சரிக்கும் முக்கிய நாடு
நேட்டோ பிரதேசத்தின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற எச்சரிக்கையை ஜெர்மனியின் உயர்மட்ட இராணுவ அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ளார்.
ஜெர்மனியின் கூட்டு நடவடிக்கை கட்டளைத் தலைவரான அலெக்ஸாண்டர் சோல்ஃப்ராங்க், பெர்லினில் உள்ள தனது தலைமையகத்தில் பேசியபோது, ரஷ்யாவின் தற்போதைய போர் திறனை முன்னிட்டு உடனடியாகச் சிறிய அளவிலான தாக்குதலை நடத்த ரஷ்யா தயாராக இருக்கலாம் என கூறியுள்ளார்.
ரஷ்யாவின் மொத்த படையணி
இது குறித்த மேலும் தெரிவித்துள்ள அவர், “ரஷ்யாவின் தற்போதைய இராணுவ திறன்களையும் அதன் போர் சக்தியையும் பார்த்தால், நாளைக்கே நேட்டோ பிரதேசத்தின் மீது ஒரு குறுகிய தாக்குதலை ரஷ்யா மேற்கொள்ள முடியும். ரஷ்யாவின் விமானப்படை மற்றும் அணு ஆயுதக் கிடங்குகள் பெரும்பாலும் மாறாமல் உள்ளன.

Image Credit: Yahoo
குறுகிய காலத் தாக்குதலுக்குத் தேவையான அளவு டாங்கிகள் இன்னும் ரஷ்யாவிடம் உள்ளன. தரைப்படைகள் இழப்புகளை சந்தித்து வரினும், ரஷ்யா தனது மொத்த படையணியை 1.5 மில்லியன் வீரர்களாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்றார்.
ரஷ்யாவின் கடற்படை
மேலும், ரஷ்யாவின் கருங்கடல் கடற்படை பெரும் சேதத்தை சந்தித்திருந்தாலும், மற்ற கடற்படைப் பிரிவுகள் இன்னும் வலுவாக உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Image Credit: DW
அலெக்ஸாண்டர் சோல்ஃப்ராங்க் மேலும் எச்சரித்ததாவது, “ரஷ்யா தனது இராணுவ மறுசீரமைப்பை இவ்வாறே தொடர்ந்து கொண்டிருந்தால், 2029ஆம் ஆண்டுக்குள் நேட்டோ பிரதேசத்தின் மீது பெரிய அளவிலான தாக்குதலை மேற்கொள்ளும் திறனை அடையும்” எனக் கூறியுள்ளார்.
இந்த எச்சரிக்கை, ரஷ்யா மற்றும் நேட்டோ இடையேயான தற்போதைய பதற்ற நிலையை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என சர்வதேச பாதுகாப்பு வட்டாரங்கள் கவலை தெரிவித்து வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |