கபில சந்திரசேனவின் பிரேதப் பரிசோதனை...! கோட்டை நீதவானின் அதிரடி உத்தரவு
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனை இன்று (09-05-2026) நடத்தப்பட உள்ளது.
சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் சமர்ப்பித்த உண்மைகளைக் கருத்தில் கொண்டு, கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் நியமித்த ஐவர் கொண்ட நீதி மருத்துவ சபையால் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவைக் கோட்டை நீதவான் பாசன் அமரசேன பிறப்பித்துள்ளார்.
தவறான முடிவு
அத்தோடு விசாரணையின் முடிவுகளை மே 12 ஆம் திகதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கபில சந்திரசேன, கொள்ளுப்பிட்டி பெட்ரிஸ் வீதியில் அமைந்துள்ள ஓர் இல்லத்தில் நேற்றைய தினம் (08-05-2026) தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 20 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்