விஜய் முதல்வர் ஆவரா இல்லையா..! வைரலாகும் அண்ணாமலையின் பதிவு
விஜய் ஆட்சியை பிடிப்பாரா இல்லாவிட்டால் திமுக - அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றுமா? என்ற பரபரப்புக்கு மத்தியில் அண்ணாமலை தனது இன்ஸ்டாகிராமில் இட்ட பதிவு பேசுபொருளாகி உள்ளது.
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக நேற்று நள்ளிரவில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அண்ணாமலை கருப்பு நிற உடை அணிந்து தலையில் தொப்பி வைத்தை கடற்கரையோர பாறையில் நின்று கடலை ரசிக்கும்படியாக அந்த புகைப்படம் அமைந்துள்ளது.
'கம்பேக் கொடுங்க அண்ணா
அதுமட்டுமின்றி இந்த புகைப்படத்திற்கு அவர் 'கேப்ஷன்' ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், ''புயலில் இருந்து விலகி அமைதியான தென்றலாக'' என பதிவிட்டுள்ளார்.
அண்ணாமலையின் இந்த பதிவுக்கு அவரது ஆதரவாளர்கள் லைக்குகளை அள்ளி கொடுத்து வருகின்றனர்.
அதோடு சிலர் தமிழக அரசில் நிலவரத்தை சுட்டிக்காட்டி வேடிக்கையாக கமெண்ட்டுகள் செய்வதோடு, சிலர் ''கம்பேக் கொடுங்க அண்ணா'' என கூறி வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |