ஞானசார தேரரின் காவியுடை பலவந்தமாக அகற்றப்பட்டது - உதய கம்மன்பில குற்றச்சாட்டு

Sri Lanka Politician Uthaya Gammanpila Galagoda Aththe Gnanasara Thero Prisons in Sri Lanka
By Pavi Oct 12, 2026 09:02 AM GMT
Report

சிறைச்சாலையில் கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவியுடை பலவந்தமாக அகற்றப்பட்டதாக, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (12.10.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் 08ஆம் திகதி ஞானசார தேரரைச் சந்திப்பதற்காக அவரது வேண்டுகோளின் பேரில் வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றதாகக் குறிப்பிட்ட கம்மன்பில, அப்போது காவியுடை அகற்றப்பட்டு சிறைக் கைதிகளுக்கான சீருடையை அணிவிக்க முயற்சித்த விதம் குறித்து தேரர் தன்னிடம் விளக்கியதாகத் தெரிவித்தார்.

சாமர சம்பத் தசநாயக்க அதிரடி கைது!

சாமர சம்பத் தசநாயக்க அதிரடி கைது!

தேரர் கடும் மன உளைச்சலில்

2018ஆம் ஆண்டிலும் இதேபோன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது தேரர் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் அந்த முயற்சியைக் கைவிட்டதாகவும், இம்முறை அவ்வாறு செய்யாமல் பல அதிகாரிகள் இணைந்து பலவந்தமாக சிறைச்சாலைச் சீருடையை அணிவிக்க முயற்சித்ததாகவும் கம்மன்பில தெரிவித்துள்ளார். 

ஞானசார தேரரின் காவியுடை பலவந்தமாக அகற்றப்பட்டது - உதய கம்மன்பில குற்றச்சாட்டு | Gnanasara Thera Wear Prison Uniform Gammanpila

இதன்போது, சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியின் கமராவைச் செயற்படுத்தி, வேறொரு இடத்தில் இருந்த நபர் ஒருவர் இந்தச் சம்பவத்தைப் பார்வையிடுவதற்கு வாய்ப்பளித்ததாக ஞானசார தேரர் தன்னிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஆளும் தேசிய மக்கள் சக்தியின் உயர்மட்டத் தலைவர்களின் அழுத்தம் காரணமாகவே, ஞானசார தேரருக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் விருப்பமில்லாத நிலையிலும் அவருக்குச் சிறைச்சாலைச் சீருடை அணிவிக்கப்பட்டதாகத் தாம் பொறுப்புடன் தெரிவிப்பதாக கம்மன்பில குற்றஞ்சாட்டினார்.

காவியுடையை அகற்றிய பின்னர், துறவறத்தின் அடையாளமாக எஞ்சியிருந்த இடைக்கச்சையும் அகற்றப்பட்டபோது தேரர் கடும் மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த இடைக்கச்சையைப் பெற்றுக்கொள்வதற்காக அதிகாரிகள் கைகளை நீட்டியபோது, மன உளைச்சலில் இருந்த தேரர் அதனை அவர்களிடம் கொடுக்காமல் மேலே வீசியதாகவும், அது அங்கு சுழன்றுகொண்டிருந்த மின்விசிறியில் சிக்கிக்கொண்டதாகவும் கம்மன்பில மேலும் தெரிவித்தார்.

கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது : இந்திய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கும் அநுர

கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது : இந்திய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கும் அநுர

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026