3 ஆயிரம் பணியாளர்கள் தபால் சேவையில் இணைப்பு
sri lanka
service
post
jobs
By Vanan
தபால் திணைக்களத்திற்கு புதிதாக 3,000 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.
இவர்கள் மாகாண மட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டதாக பிரதி தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தகவல் வெளியிட்டுள்ள அவர்,
கனிஷ்ட தபால் சேவைக்காக, நாளாந்த கொடுப்பனவின் அடிப்படையிலேயே புதிதாக ஊழியர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நிலவும் வெற்றிடத்திற்கமைய அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தபால் விநியோகம், அலுவலக உதவியாளர்கள் போன்ற பணிகளுக்காக இவர்கள் தபால் திணைக்களத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்