தபால் ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவு : தபால்மா அதிபரின் கருத்தால் சர்ச்சை
தபால் ஊழியர்கள் முறைகேடாக மேலதிக கொடுப்பனவை பெற்றுள்ளதாக தபால்மா அதிபர் வெளியிட்ட கருத்திற்கு கடும் அதிருப்தி தெரிவிப்பதாக தபால் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தபால்மா அதிபர் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், எதிர்வரும் 9 ஆம் திகதி கறுப்புப்பட்டி அணிந்து பணிக்கு வருவோம் என்று தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஜி.ஜி.சி. நிரோஷண தெரிவித்தார்.
இதற்கிடையே, எந்தவொரு விசாரணையும் இல்லாமல் தபால்மா அதிபரால் பணியாளர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கடுமையாக எதிர்ப்பதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார குறிப்பிட்டார்.
தபால் துறை ஊழியர்கள்
சமீபத்தில் ஹப்புத்தளையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற தபால்மா அதிபர் ருவன் சத்குமார சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

அதன்படி, தபால் துறை ஊழியர்கள் தங்கள் கைரேகையைப் பதிக்காமல் கோடிக்கணக்கான மேலதிக கொடுப்பனவுகளை பெற்றுள்ளதாகவும், தபால் சேவையில் நிகழும் பல முறைகேடுகள் குறித்தும் கருத்து வௌயிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |