தேர்தல் பிரச்சாரத்திற்கான தனியார் பேருந்துகள் : வெளியான முக்கிய அறிவிப்பு!
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பிரச்சாரங்களுக்காக தனியார் பேருந்துகள் வழங்கப்பட்டாலும், பேருந்துகளில் ஸ்டிக்கர்கள் அல்லது சுவரொட்டிகள் ஒட்ட அனுமதிக்கப்படாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்திற்காக பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் வேட்பாளர் அல்லது அரசியல் கட்சிகள் , அதன் முழுப்பொறுப்பை ஏற்க வேண்டுமென அவர் ஊடங்களுக்கு அறியத்தந்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பேருந்துகளில் ஸ்டிக்கர்கள் மற்றும் போஸ்டர்கள் ஒட்டுவதால் அதன் பெயிண்ட் மற்றும் உலோகம் சேதமடையும்.
தேர்தல்
முந்தைய தேர்தல்களின் போது எங்கள் பேருந்துகள் தேர்தல் பிரச்சாரங்களுக்கு வாடகைக்கு வழங்கப்பட்டன.
எவ்வாறாயினும், அரகலய காலத்தில் தனியார் பேருந்துகளுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் இன்னும் சரி செய்யப்படவில்லை.
பேருந்து சேவை
சில பேருந்துகள் அவற்றின் உரிமையாளர்களால் பழுதுபார்க்கப்பட்டன ஆனால் இன்னும் பல பேருந்துகள் பழுதுபார்க்கும் இடங்களில் உள்ளன" என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு சேதமடைந்த பேருந்துகளை சீர்செய்து மீண்டும் சேவைக்கு கொண்டு வருமாறு கெமுனு விஜேரத்ன மத்திய வங்கி ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |