அதிபர் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா..! சந்திரிகா வெளியிட்ட தகவல்
Chandrika Kumaratunga
Election
By Jaso
அதிபர் தேர்தலை பிற்போடுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை என முன்னாள்அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
ஐக்கிய குடியரசு முன்னணி நேற்று மாலை கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே திருமதி குமாரதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசின் அறிவிப்பு : விளக்கமளிக்க மறுத்த சந்திரிக்கா
எனினும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறைமை நீக்கப்படும் என்ற ஊகங்களுக்கு மத்தியிலும் அதிபர் தேர்தல் நடத்தப்படும் என அண்மையில் அதிபர் அலுவலகம் வழங்கிய உறுதிமொழி தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் விளக்கமளிக்க மறுத்துவிட்டார்.

"அதிபர் தேர்தலை ஒத்திவைக்க முடியாது என்றுதான் என்னால் கூற முடியும்," என்று அவர் மேலும் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி