பரீட்சை காலத்தில் தடையின்றி மின்சாரம் வழங்க 4 அறிவுறுத்தல்கள்
க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 4 விடயங்களை அடிப்படையாக கொண்ட திட்டமொன்றை வெளியிட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏற்கனவே கோரியிருந்த போதிலும், மின்சார சபை அதனை நிராகரித்திருந்தது.
மின்பாவனை குறைப்பு
இந்த நிலையில், மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு மக்கள் மின்பாவனையை இயலுமான அளவு குறைத்துக் கொள்ள வேண்டும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, 4 விடயங்களை அடிப்படையாகக் கொண்ட திட்டத்தின் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், மாலை 6 மணி முதல் 10 மணி வரை வீதி விளக்குகள் அணைக்கப்பட வேண்டும் எனவும் தனியார் நிறுவனங்கள் தங்கள் விளம்பரப் பலகைகளின் விளக்குகளை அணைத்து உதவ வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பரீட்சைகள் முடிவடைந்து ஒரு மணித்திலாயத்திற்கு பின்னர் மின்விநியோகத்தை துண்டிக்க ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதுடன், மாலை மற்றும் இரவு வேளையில் இரு கட்டமாக மின்துண்டிப்பை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

