நாட்டின் சில பிரதேசங்கள் இருளில் மூழ்கின?
கெரவலப்பிட்டி யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை வழங்கும் வகையில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட நியூ போர்ட்ரஸ் எனர்ஜி இன்க் நிறுவனத்துடன் அரசாங்கம் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கைவிடுமாறு கோரி மின்சார சபை ஊழியர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு இன்றையதினம் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.
இந்த நிலையில், சில இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை ஊழியர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் (Ranjan Jayalal)தெரிவித்துள்ளார்.
சில இடங்களில் மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக ரஞ்சன் ஜயலால் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதை எதிர்த்து மக்களும் வீதிகளில் இறங்கிப் போராட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
தாம் போராட்டத்தை முன்னெடுக்கும் போது விநியோகத் தடை ஏற்பட்டால் அதனை சரிசெய்யப் போவதில்லை என மின்சார சபை ஊழியர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
you may like this