திடீர் மின் தடைக்கான உண்மைக் காரணம்: விரைவில் வெளியாகவுள்ள செய்தி
நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற மின்வெட்டு தொடர்பில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபை ஆகிய இரண்டும் தனித்தனியான விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.
இன்று (டிசம்பர் 10) காலை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
நேற்று ஏற்பட்ட மின் தடை தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று பிற்பகல் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
திடீர் மின் தடை
நேற்றையதினம் கொத்மலையில் இருந்து பியகம வரையிலான மின் விநியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று மாலை 05.10 மணியளவில் நாடு முழுவதும் திடீரென மின் தடை ஏற்பட்டது.
இலங்கை மின்சார சபையானது உடைந்த மின்சார விநியோகத்தை முறையாக மீட்டெடுத்ததுடன், நேற்றிரவு 11 மணியளவில் மின்சார விநியோகத்தை சீர்செய்ய இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த திடீர் மின் தடைக்கான காரணம் இன்னும் துல்லியமாக வெளிப்படுத்தப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தனித்தனி விசாரணை
இந்தநிலையில், மின்வெட்டு தொடர்பில் எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபை ஆகிய இரண்டும் தனித்தனியான விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.
அதேவேளை, நாடு முழுவதும் திடீர் மின்வெட்டு எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ள புலனாய்வுப் பிரிவு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |