நாளை மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் விதம்!
நாளை மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்து பொது பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நாளை 3 மணித்தியாலங்களும் 40 நிமிடங்களும் மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, A B C D E F G H I J K L P Q R S T U V W ஆகிய வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் 2 மணித்தியால மின் வெட்டு நடைமுறைப்படும்.
பின்னர், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும்,
கொழும்பு முன்னுரிமை வலயங்களில் (CC) காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணித்தியாலங்கள் மின் வெட்டு நடைமுறைப்படும்.
இதேவேளை, M N O X Y Z ஆகிய வலயங்களில் காலை 5 மணி முதல் 8 மணி வரை 3 மணித்தியால மின் வெட்டு நடைமுறைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
