எரிபொருள் பற்றாக்குறை: நீடிக்கப்படப்போகும் மின்துண்டிப்பு நேரம்! வெளியாகிய அறிவித்தல்
மின்வெட்டு காலம் நீடிக்கப்படும்
எரிபொருள் இறக்குமதியை தாமதப்படுத்தினால் எதிர்காலத்தில் மின்வெட்டு காலம் நீடிக்கப்படும் அபாயம் உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அடுத்த ஒரு வாரத்துக்கு மூன்றுமணித்தியால மின்வெட்டைதொடர்ந்து அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபையிடம் போதிய எரிபொருள் இருப்பு உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஒரு வார காலத்திற்குள் எரிபொருள் நிலைமை சீர் செய்யப்படவில்லையெனில் மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேரம் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
பொதுமக்களின் ஆலோசனைக்காக உத்தேச மின் கட்டணம்
இதேவேளை, உத்தேச மின் கட்டண திருத்தம் பொதுமக்களின் ஆலோசனைக்காக பகிரங்கப்படுத்தப்படுது என்றும்,
பொதுமக்கள் நேற்று (28) முதல் 21 நாட்களுக்குள் ஆணைக் குழுவிடம் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
