இலங்கை முழுவதும் மூன்று நாட்களுக்கு சுழற்சி முறையில் மின்வெட்டு
நாடளாவிய ரீதியில் இன்று (19) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்துவதற்கான கோரிக்கையானது இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒக்டோபர் 19 முதல் 21 வரை தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு இந்த மின்வெட்டை நடைமுறைப்படுத்துவதற்க்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
வலுசக்தி அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் இதனை கூறியுள்ளார்.
ஒரு மணி நேரம்
அதற்கமைய மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையான காலப்பகுதியில், நான்கு வலயங்களாக ஒரு மணி நேரத்திற்கு மின்வெட்டை நடைமுறைப்படுத்துவதற்க்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பில் உரையாற்றிய தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர், இன்று முன்மொழியப்பட்ட மின்வெட்டு மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.
நாளை (20) மற்றும் புதன்கிழமை (21) இதேபோன்ற ஒரு மணி நேர மின்வெட்டை செயல்படுத்த அனுமதி கோரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.