எதிர்வரும் 3 மாதங்களுக்கு மின் துண்டிப்பா? வெளியாகவுள்ள தீர்மானம்
எதிர்வரும் 3 மாதங்களுக்கு மின் துண்டிப்பு அவசியம் என இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கான விசேட கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க (Janaka Ratnayake) தெரிவித்துள்ளார்.
இதன்படி பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்ளில் மின்துண்டிப்பு அவசியம் என கோரியிருந்தன.
இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளும் நோக்கில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மின் துண்டிப்புக்கான அனுமதியை வழங்குவதா? இல்லையா? என்பது தொடர்பில் இதன்போது தீர்மானிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் மின் நுகர்வை குறைக்க வேண்டும். நாளொன்றுக்கு 300 மெகாவோட் மின்சாரத்தைக் குறைக்க முடியுமாயின், இலக்கை நோக்கிப் பயணிக்க முடியும்.
எனவே, மின்சாரத்தை தடையின்றி விநியோகிக்க வேண்டுமாயின், பொதுமக்களும், அரச மற்றும் தனியார் நிறுவனங்களும் இந்த ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.