நிலவும் சீரற்ற வானிலை : பல பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு
ஹட்டனின் பல பகுதிகளில் மின்சாரம் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்கம்பமொன்றின் மீது பாரிய மரமொன்று வீழ்ந்ததை அடுத்தே, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மரம் வீழ்ந்த சம்பவத்தில், மின்சார கம்பிகளுக்குக் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மின்சாரம் விநியோகம்
இதேவேளை, நுவரெலியாவில் தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் நுவரெலியா கிரகரி வாவியில் படகு சவாரி சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் முற்றாக நிறுத்தப்பட்டு சவாரிக்கு அனுமதிக்கப்படவில்லை.
மீண்டும் இன்று (21.07.2025) காலை காற்றின் வேகம் சற்று குறைந்து காணப்பட்ட நிலையில் ஒரு சில படகுகளுக்கு மாத்திரம் சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர் .
பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கிரகரி, வாவியில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியாவில் மழையுடன் காற்றின் வேகம் அதிகரித்ததால் சுற்றுலா பயணிகளின் வருகை சற்று குறைந்துள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி மிதி படகுகள் இயக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வாவி பகுதியில் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து கடும் குளிர் நிலவி வருகிறது அத்துடன் மழையால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
