மின் தடையினால் கடையொன்றின் ஊழியர்களுக்கு நேர்ந்த கதி
பொகவந்தலாவ பகுதியில் மின்பிறப்பாக்கியில் இருந்து வெளியேறிய புகையை சுவாசித்ததால் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவ பகுதியில் உள்ள சில்லறை கடையொன்றில் இன்று (09) ஏற்பட்ட மின்தடை காரணமாக மின்பிறப்பாக்கி இயக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மின்பிறப்பாக்கியில் இருந்து வெளியான புகையினால் குறித்த கடையில் இருந்து ஊழியர்கள் நோய்வாய்ப்பட்டு பொகவந்தலாவ பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மின்சாரத் தடை
அத்தோடு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களில் 25-35 வயதுக்குட்பட்ட மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், நாடளாவிய ரீதியில் இன்று (09) காலை ஏற்பட்ட மின்சாரத் தடை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.
பாணந்துறை மின் இணைப்பு துணை மின் நிலையத்தில் குரங்கு ஒன்று மோதியதால் மின் தடை ஏற்பட்டதாக மின்சார சபை அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)