சனி,ஞாயிறு தினங்களில் மின்வெட்டு -வெளியானது அறிவிப்பு (விபரங்கள் உள்ளே)
Power Cut Tamil nadu
Sri Lanka
Public Utilities Commission of Sri Lanka
By Sumithiran
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நாளையதினம் (19) முதல் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு 1-2 மணி நேரம் மின்வெட்டுக்கு அனுமதி அளித்துள்ளது.
இதன்படி சனி (19) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (20) 01 மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மின்வெட்டு

திங்கட்கிழமை (21) 02 மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒரு மணி நேரம் மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
21ஆம் திகதி திங்கட்கிழமை குறித்த வலயங்களில் பகல் வேளையில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.


3ம் ஆண்டு நினைவஞ்சலி