மூன்று பிள்ளைகளின் தந்தை யாழில் பரிதாபமாக உயிரிழப்பு
jaffna
death
father
By Vanan
யாழ். கரவெட்டி வடக்கில் மூன்று பிள்ளைகளின் தந்தை இன்று மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக நெல்லியடி காவல்துறையினர் தெரிவித்தனர்.
துன்னாலை ஆண்டாள் வளவுப் பகுதியைச் சேர்ந்த வி.விஜிதரன் (வயது-33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் நெல்லியடி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.