நாட்டின் பல பகுதிகள் இருளில் மூழ்கின
Sri Lanka
Ceylon Electricity Board
Power Cut Today
Minister of Energy and Power
By Nithusan
தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் பல பிரதேசங்களில் மின் பகிர்மான வலையமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின்தடை ஏற்பட்டுள்ள பகுதிகள்

இதற்கமைய அம்பாந்தோட்டை, மாத்தறை, எம்பிலிப்பிட்டிய மற்றும் பெலியத்த ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின்சார விநியோகத்தை சீர் செய்வதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.