வழமைக்கு திரும்பிய மின் விநியோகம்
நாடளாவிய ரீதியில் இன்று (09) காலை ஏற்பட்ட மின்சாரத் தடை தற்போது சில பகுதிகளில் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு தேசிய மருத்துவமனை, அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையம், பியகம மற்றும் சபுகஸ்கந்த உள்ளிட்ட பல முக்கிய பகுதிகள் மற்றும் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழமைக்கு திரும்பியுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு பிரதான மின்சார அமைப்புக்கு சொந்தமான "பாணந்துறை கிரிட் துணை மின்நிலையத்தில்" ஏற்பட்ட அவசரநிலை காரணமாக நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மின் தடை
அப்போது, பாணந்துறை மின் இணைப்பு துணை மின் நிலையத்தில் குரங்கு ஒன்று மோதியதால் மின் தடை ஏற்பட்டதாக எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று மாலை 4 மணிவரை தேசிய மின் கட்டமைப்பிலிருந்து தங்கள் சூரிய மின் சக்தி இணைப்பை துண்டிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |