அடுத்தடுத்து உலுக்கிய 2 நிலநடுக்கங்கள்! சரித்து விழுந்த கட்டடங்கள் - சுனாமி எச்சரிக்கை
வெனிசுலாவில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு சில நிமிட இடைவெளியில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் தலைநகர் கராகஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலநடுக்கமானது வெனிசுலாவில் கரீபியன் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள மோரோன் பகுதிக்கு மேற்கே சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சுனாமி எச்சரிக்கை
இந்த நிலநடுக்கம் 13 கிலோமீட்டர் ஆழத்தில், 7.1, 7.5 என்ற ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் தலைநகர் கராகஸில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததோடு, கரீபியன் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டன.
பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதை வெனிசுலாவின் உள்துறை அமைச்சர் டியோஸ்டாடோ கபெல்லோ உறுதிப்படுத்தினார்.
உயிரிழப்புகளோ அல்லது சேதங்களோ ஏற்பட்டதாக அதிகாரிகள் உடனடியாகத் தெரிவிக்கவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 23 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்