கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
United States of America
Earthquake
California
By Sathangani
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் நேற்று (20) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.
தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஓஜாய் நகருக்கு தென்கிழக்கே நான்கு மைல் தொலைவில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் இது பல பிரதேசங்களில் உணரப்பட்டுள்ளதுடன், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
