வெளிநாடொன்றில் 7.5 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - அச்சத்தில் மக்கள்
தென் அமெரிக்காவிற்கு (South America) அண்மையில் 7.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கம் இன்று (22) தென் அமெரிக்காவின் தெற்கு முனையையும் அண்டார்டிகாவையும் இணைக்கும் டிரேக் பாசேஜில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 10.8 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும், ஆர்ஜென்டினாவின் உஷுவாயா நகரிலிருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் நிகழ்ந்ததாகவும் பதிவாகியுள்ளது.
சுனாமி முன்னெச்சரிக்கை
சிலியின் கடற்படை நீரியல் மற்றும் கடலியல் சேவை, சிலிய அண்டார்டிக் பிரதேசத்திற்கு சுனாமி முன்னெச்சரிக்கை விடுத்திருந்தது.
ஆனால், அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என உறுதிப்படுத்தியது.
இந்த நிலநடுக்கத்தால் உடனடி பாதிப்புகள் அல்லது உயிரிழப்புகள் குறித்து எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.
இருப்பினும், சிலியின் மாகல்லனேஸ் பிராந்தியத்தில் உள்ள கடற்கரை பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக மக்கள் உயரமான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
