அதிகாரங்களை நாடாளுமன்றுக்கு வழங்க வேண்டும் - மனோ கணேசன்
அரச தலைவருக்குள்ள அதிகாரங்களை முழுமையாக அகற்றி விட்டு ஜனநாயக உரிமைகளை நாடாளுமன்றுக்கு வழங்க வேண்டும் என்பதே நாட்டு மக்களின் பிரதான கோரிக்கை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.
எதிர்வரும் 28ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடைபெற உள்ள தொழிற்சங்க போராட்டத்திற்கு பெருந்தோட்ட மக்களும் ஆதரவு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர்களில் ஒருவரான பழனி திகாம்பரம், இடைக்கால அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினாலும் அமைச்சுப் பதவிகளை ஏற்கப் போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிறப்புச் செய்திகள்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இரத்தத்தில் எழுதப்பட்ட புதிர்
4 நாட்கள் முன்